www.garudabazaar.com

Video: அஜித் Fansக்கு அடுத்த ட்ரீட்!.. வலிமை ஓபனிங் பாடல் தொடர்பான வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை திரைப்படத்தின் அறிமுகப்பாடல் உருவாகும் குறிப்பிட்ட வீடியோ என்று கூறப்பட்டு இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அஜித் வலிமை Ajith Valimai Intro song making Yuvan Vignesh shivan

மியூசிக் ஸ்டூடியோ ஒன்றில் இசைக்கலைஞர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்த வீடியோவில், சில நொடிகளுக்கு பிறகு அந்த அரங்கில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரை காணமுடியும். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த படத்தில் அஜித்துக்கான தொடக்க பாடலை எழுதுவதாக முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தன. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த வீடியோ, வலிமை படத்தின் தொடக்க பாடலுக்கான பணி என ரசிகர்கள் யூகித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

அஜித் வலிமை Ajith Valimai Intro song making Yuvan Vignesh shivan

அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் பெருமளவில் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தரப்பிலிருந்து நேற்றைய தினம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பிரபல இணையதள பத்திரிகை ஒன்றின் பேட்டியில் அவர் பேசும்போது, ஒரே ஒரு சண்டைக்காட்சியை தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு, வலிமை பட பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாகவும், அடுத்த வாரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அஜித் வலிமை Ajith Valimai Intro song making Yuvan Vignesh shivan

நீண்ட நாட்களாக அஜித்தின் வலிமை படம் தொடர்பான அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த அரிய தகவல் நிம்மதியை அளித்தது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை நேர்கொண்ட பார்வை படத்தில் வினோத் இயக்கியிருந்தார். அந்தப் படத்தை போனிகபூர், ஜீ ஸ்டுடியோ உடன் இணைந்து தயாரித்திருந்தார். இப்போது இதே கூட்டணி வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பாவக்கதைகள் படத்தின் ‘லவ் பண்ணா உட்றணும்’ பகுதியை இயக்கியிருந்த நிலையில் தற்போது ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்துக்கான பணிகளில் மும்முரமாக இருக்கிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா, சமந்தா நடித்திருக்கும் இந்த படத்தின் ‘ரெண்டு காதல்’ என்கிற முதல் சிங்கிள் ட்ராக் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

ALSO READ: ‘ஒரு வருஷ காத்திருப்புக்கு அப்றம்’.. வந்தாச்சு ‘தல’ அஜித்தின் வலிமை படத்தின் ‘அதகளமான அப்டேட்’!.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

VIDEO: அஜித் FANSக்கு அடுத்த ட்ரீட்!.. வலிமை ஓபனிங் பாடல் தொடர்பான வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

அஜித் வலிமை Ajith Valimai Intro song making Yuvan Vignesh shivan

People looking for online information on அஜித், வலிமை, Thala, Trending, Valimai, Vignesh shivan, Viral, Yuvan Shankar Raja will find this news story useful.