www.garudabazaar.com

PS1: 'சமுத்திரகுமாரி பூங்குழலி'-ஐ தொடர்ந்து வெளியான அடுத்த பெண் கதாபாத்திர Look.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.  ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படமான இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளியிடவுள்ளது.

ponniyin selvan part 1 vanathi character look revealed

அமரர் கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் 2 பாகங்களாக உருவாக இருக்கிறது, தற்போது உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து முன்னதாக இந்த படத்தில் பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் தான், இப்படத்தின் அடுத்தடுத்த கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவந்தவண்ணம் உள்ளன. அதன்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியாகின.

இதேபோல், ‘காற்றைப்போல் மென்மையானது, கடல் போல் வலிமையானது’ என குறிப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் ‘சமுத்திரகுமாரி பூங்குழலி’-யின் கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது.

இந்நிலையில்தான் இப்படத்தில் வரும் வானதி கதாபாத்திரத்தின் போஸ்டர் லுக் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சோபிதா துலிபாலா நடிக்கிறார். அவரும் இந்த மோஷன் போஸ்டரை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

ponniyin selvan part 1 vanathi character look revealed

People looking for online information on Aishwarya rai, AR Rahman, Jayam Ravi, Karthi, Lyca Productions, Mani Ratnam, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Sobhita Dhulipala will find this news story useful.