COBRA D Logo Top
www.garudabazaar.com

அச்சு அசலா ஐஸ்வர்யா ராய் மாதிரியே இருக்கும் இளம்பெண்.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்ப்பதற்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இளம்பெண் ஒருவரின் சமீபத்திய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Aishwarya Rai Look like aashitha latest video goes viral

Also Read | இரண்டு பாகங்களாக வெளியாகிறதா 'விடுதலை'? படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

ஐஸ்வர்யா ராய்

மங்களூருவில் கடந்த 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழில் இயக்குனர் மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் திரைப்பட துறைக்குள் கால்பதித்தார் ராய். இதனையடுத்து தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடிக்கத் துவங்கினார் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரும் பாலிவுட் உலகின் ஜாம்பவானுமான அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த மாதம் திரைக்கு வரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்யா ராய் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rai Look like aashitha latest video goes viral

ஆஷிதா

திரையுலகில் பிரபலமான நபர்களை போலவே இருக்கும் மனிதர்கள் குறித்த செய்தி அவ்வப்போது வைரலாவது உண்டு. அப்படி கடந்த வருடம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆஷிதா ரத்தோர் எனும் இளம்பெண். இவர் பார்ப்பதற்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பது மட்டுமன்றி  ஐஸ்வர்யா ராய் வசனங்களுக்கு லிப் சிங்க் வீடியோக்கள் வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். இது சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே பல லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

Aishwarya Rai Look like aashitha latest video goes viral

இந்நிலையில், சமீபத்தில் ஆஷிதா ரத்தோர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. இந்த வீடியோ இதுவரையில் 24 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் பலரும் இவர் ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

 

Also Read | "மாமன் மச்சான் எல்லாம் இனி.." அனிருத் குரலில் PRINCE படத்தின் முதல் சிங்கிள் பாட்டு!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rai Look like aashitha latest video goes viral

People looking for online information on Aishwarya rai, Aishwarya Rai Look Alike will find this news story useful.