COBRA D Logo Top
www.garudabazaar.com

PS 1 : "ஐஸ்வர்யா லக்ஷ்மியின் கதாபாத்திரம் இது தான்".. வெளியான அப்டேட்.. செம கேரக்டர் ஆச்சே இது!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Aishwarya lekshmi character in ponniyin selvan revealed

இதன் முதல் பாகம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்களான பொன்னி நதி, சோழா சோழா ஆகியவை ஏற்கனவே வெளியாகி இருந்தது. இவை அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

Aishwarya lekshmi character in ponniyin selvan revealed

பொன்னியின் செல்வன் படத்தின் இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார். மேலும், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார்.

அதே போல, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நடிகர்கள் சரத்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோரின் கதாபாத்திரம் பற்றியும் அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகி இருந்தது.

Aishwarya lekshmi character in ponniyin selvan revealed

அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 3 நாட்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya lekshmi character in ponniyin selvan revealed

People looking for online information on Aishwarya Lekshmi, Aishwarya rai, AR Rahman, Jayam Ravi, Karthi, Mani Ratnam, Ponniyin Selvan, PS 1, Trisha, Vikram will find this news story useful.