COBRA D Logo Top
www.garudabazaar.com

"ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சு".. மனம் திறந்த Ponniyin Selvan பட நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு நழுவியது குறித்து பிரபல பொன்னியின் செல்வன் பட நடிகை பதிவிட்டுள்ளார்.

Sobhita Dhulipala about Acting chance with Hrithik Roshan

Also Read | பொன்னியின் செல்வன் 'நந்தினி' ஐஸ்வர்யா ராயுடன் வானதி.. வெளியிட்ட வைரல் ஃபோட்டோ!

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sobhita Dhulipala about Acting chance with Hrithik Roshan

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Sobhita Dhulipala about Acting chance with Hrithik Roshan

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்நிகழ்வில் ஒரு ரசிகர், "எந்த பாலிவுட் நடிகருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்" என கேட்ட கேள்விக்கு நடிகை ஷோபிதா துலிபாலா, "ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஹிருத்திக் மிகச் சிறந்த நடிகர். கிட்டத்தட்ட அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு கை நழுவி போனது. விரைவில் அவருடன் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது." என பதில் அளித்துள்ளார்.

Sobhita Dhulipala about Acting chance with Hrithik Roshan

பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வானதி கதாபாத்திரம், கொடும்பாளூர் இளவரசி ஆவார். குந்தவை நாச்சியாரின் தோழியும், அருள் மொழி வர்மனின் காதலியாகவும் வருபவர்.

Sobhita Dhulipala about Acting chance with Hrithik Roshan

ஷோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப்பின் த்ரில்லர் படமான ராமன் ராகவ் 2.0 (2016) இல் துலிபாலா அறிமுகமானார், மேலும் அவர் தெலுங்கு படங்களான கூடாச்சாரி (2018) மற்றும் மேஜர் (2022) மற்றும் மலையாளத் திரைப்படங்களான மூத்தோன் (2019) குருப் (2021) படத்திலும் நடித்துள்ளார்.

Also Read | பொங்கலுக்கு ரிலீஸாகும் சிரஞ்சீவியின் புதிய படம்.. BTS போட்டோவுடன் வெளிவந்த ஷூட்டிங் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Sobhita Dhulipala about Acting chance with Hrithik Roshan

People looking for online information on Hrithik Roshan, Sobhita Dhulipala will find this news story useful.