"சூர்யா பர்த்டேவில் fans-க்கு இப்படி ஒரு ட்ரீட்டா?!".. அது மட்டும் நடந்தா... பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தமது வெற்றிகரமான திரைப்படங்களால் திரை உலகில் உற்சாகத்துடன் இயங்கி வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

new updates on suriya movies directed pandiraj TJ Gnanavel

சூர்யாவின் இந்த திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார்.

new updates on suriya movies directed pandiraj TJ Gnanavel

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய வெற்றிகரமான படைப்பான அசுரன் திரைப்படத்தை இயக்கியதற்கு பிறகு விடுதலை திரைப்படத்தை விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் இயக்கத் தொடங்கினார். இந்த படத்தை தொடர்ந்து அவர் சூர்யா நடிக்கவிருக்கும், ‘வாடிவாசல்’ திரைப் படத்தை இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான இசை பணிகள் நடப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

new updates on suriya movies directed pandiraj TJ Gnanavel

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா பிரபல இயக்குநரின் திரைப்படம் ஒன்றில், கேமியோ கதாபாத்திரமாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தின் முக்கிய காட்சியின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா வழக்கறிஞராக தோன்றும் புகைப்படம் வைரலானது. அசோக் செல்வன் நடிப்பில் 'கூட்டத்தில் ஒருத்தன்' திரைப்படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில்தான், சூர்யா இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தில் கர்ணன் பட நாய்கி ரெஜிஷா விஜயன் நாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி சூர்யா இணைவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

new updates on suriya movies directed pandiraj TJ Gnanavel

இதேபோல் முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா40 திரைப்படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த படத்தில் நடிக்கும் சூர்யா வரும் ஜூலை 12-ஆம் தேதி இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் மீண்டும் இணையவுள்ளதாகவும்,  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி வெளியிடுவதற்கு சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ALSO READ: அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோயில்.. 200 டன் எடையா? .. தரிசித்த முக்கிய பிரபலம் யார்னு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

new updates on suriya movies directed pandiraj TJ Gnanavel

People looking for online information on Pandiraj, Sun pictures, Suriya, Suriya39, Suriya40, Suriya41, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.