பிரேம்ஜி இசையமைத்து, ஹீரோவாக நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’.. வெளியான வேற லெவல் teaser!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் கங்கை அமரனின் மகனும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி, திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பிரபலம்.

Premgi Amaren Starring and musical Tamil Rockers Teaser is out

வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும் தவறாமல் தோன்றும் பிரேம்ஜி, தனக்கே உரிய பாணியில் மிகவும் இயல்பாக நடிக்கக் கூடியவர். இதனிடையே அவர் இசையமைப்பாளராகவும் வெற்றி நடை போட்டு வருகிறார். அண்மையில் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணிபோஜன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பி. ஜூ5 ஓடிடியில் வெளியான மலேசியா டூ அம்னீசியா திரைப்படத்தில் இசையமைத்திருந்தார்.

இதனிடையே ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் கே.பிச்சாண்டி தயாரிப்பில், பரணி ஜெயபால் இயக்கத்தில், பிரேம்ஜி இசையமைத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது.

இந்த திரைப்படம் மிகவும் ட்ரெண்ட் ஆனதற்கு முக்கிய காரணம், இத்திரைப் படத்தின் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்கிற டைட்டில் தான்.  பிரேம்ஜியுடன், நாயகியாக மீனாக்‌ஷி தீக்‌ஷித் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் விடிவி கணேஷ், 'ஆடுகளம்' நரேன், எஸ்.பி.பி.சரண் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் எந்த மாதிரியான கதைக்களங்களுடன் இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த டீசரை பார்க்கும்போது படம் செம ஜாலியாக இருக்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. குறிப்பாக பணம் கொள்ளையடிக்கப்படும் காட்சிகள் நடக்கின்றன. முடிவில் பிரேம்ஜி, ‘மங்காத்தாடா’ என்கிறார். இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, அவரது தந்தை கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார். விரைவில் இந்த திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: தல அஜித்தின் வலிமை.. அடேங்கப்பா!! ரிலீஸ்க்கு முன்பே இப்படி ஒரு சாதனையா? கொல மாஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Premgi Amaren Starring and musical Tamil Rockers Teaser is out

People looking for online information on Premgi Amaren, SPB Charan, Tamilrockers will find this news story useful.