போடு வெடிய!! ரஜினிகாந்தின் "அண்ணாத்த"... வெளியான ரிலீஸ் தேதி & ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Rajinikanth Annaatthe Sun Pictures release date and FL update

ஷங்கர் நடிப்பில் ரஜினி நடித்த 'எந்திரன்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தயாரிக்கிறது.

'அண்ணாத்த' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை தொடர்பாக அமெரிக்காவில் இருக்கிறார். இந்நிலையில் 'அண்ணாத்த' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பிரம்மாண்டமான அறிவிப்பாக, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் 2021 நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ஜார்ஜ் மரியன், அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவரும் என்று மாஸான ஒரு ப்ரோமோ வீடியோவை பகிர்ந்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த மாத இறுதியில் தனது டப்பிங் பணிகளைத் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: "யோகி பாபு .. ராஜேந்திரனின் viral போஸ்!".. ஃபோட்டோ எடுப்பது நம்ம தல-யா?.. ட்விட்டரில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Annaatthe Sun Pictures release date and FL update

People looking for online information on Annaatthe, D Imman, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.