மலையாளத்தில் சக்கை போடு போட்ட படம்- மாதவன் நடிப்பில் 'மாறா' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மல்லுவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த படம் சார்லி. அதில் துல்கர் சல்மான், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தை தமிழில் மாறா என்ற ரீமேக் செய்துள்ளார்கள். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

Madhavan starrer Maara latest updates by film crew

இந்தப் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் கொரோனா நோய் ப்ரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தொடங்க உள்ளன. இவ்வேலைகள் அரசாங்கம் விதித்துள்ள பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாறா படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். கல்கி படத்தை இயக்கிய திலீப் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் மிகப் பெரிய திரை ஆளுமைகள் இப்படத்தில் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர். விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்புக்கள் வெளியிடப்படும்.

Madhavan starrer Maara latest updates by film crew

People looking for online information on Maara, Madhavan, Shraddha Srinath will find this news story useful.