பைக் accident இல்லை - இளம் காஸ்டிங் இயக்குனர் கிருஷ் மறைவு குறித்து தெளிவுபடுத்திய உறவினர்
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட்டில் பணிபுரிந்து வரும் காஸ்டிங் டைரக்டர் கிருஷ் கபூர் சமீபத்தில் காலமானார். இயக்குனர் மகேஷ் பட்டின் ஜலேபி மற்றும் கிருதி கர்பண்டா நடித்த வீரே கி வெட்டிங் போன்ற படங்களில் நடிகர்களை தேர்ந்தெடுத்து பிரபலமடைந்தார்.
28 வயதேயான கிருஷ் மூளை ரத்தக்கசிவு காரணமாக இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கிருஷ் கபூர் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்று சில ஊடகங்களில் வெளியானது. இதை மறுத்த அவரது தாய்மாமா சுனில் பல்லா கூறியது, ‘கிருஷ் மே 31 அன்று மீரா சாலையில் உள்ள தனது வீட்டில் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. சில நிமிடங்களுக்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது’ என்று வருத்தத்துடன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "அவருக்கு மருத்துவரீதியாக வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் திடமாகவும், ஆரோக்கியமாகத்தான் இருந்தார், மே 31 அன்றுதான் அவருக்கு திடீரென்று மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்தார்" என்று சுனில் பல்லா தெரிவித்தார்.
கிருஷ் கபூருக்கு, தாய், மனைவி மற்றும் ஏழு வயது குழந்தை உள்ளனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sripriya Reveals She Was First Choice Not Sridevi In Moondram Pirai
- Not Sridevi Sripriya Was Original Choice For Moondram Pirai
- Wajid Khan Of Sajid - Wajid Duo Passes Away, RIP Wajid Khan
- Mollywood In Shock Celebrated Socialist Mathrubhumi MD Passes Away RIP Veerendrakumar
- Lavanya Tripathi Says She Will Avoid Intimate Scenes Post COVID
- TV Actress Hangs Herself After Posting Suicide Note On Instagram, RIP Preksha Mehta
- Gautham Menon Exclusive Interview To Behindwoods About Script For Suriya And Karthik Dial Seytha Yenn
- நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் | Netflix To Cancel The Subscription Of Inactive Members
- Netflix To Cancel Subscriptions Of Idle Accounts
- Producer Who Introduced Kamal As Solo Hero In Tamil Passes Away - RIP K Raghunath
- Twilight Movie Actor And Girl Friend Found Dead, Death Reason Unknown RIP Gregory Tyree Boyce
- Young TV Actor Suicides, Dies By Hanging Himself Due To Money Problems RIP Manmeet Grewal