Viruman Logo Top
www.garudabazaar.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி-2 எப்போ? 'டில்லி' கார்த்தி சொன்ன முக்கிய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் கார்த்தி சூப்பர் தகவலை கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj Kaithi2 Update from Karthi at Viruman Press Meet

Also Read | இது தான் பஹத் பாசிலோட செல்லப் பெயரா? நஸ்ரியாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் வெளிவந்த தகவல்!

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக, விஜய்யை வைத்து  'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.

'விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீசானது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

Lokesh Kanagaraj Kaithi2 Update from Karthi at Viruman Press Meet

விக்ரம் படத்தில் சில காட்சிகளில், லோகேஷ் கனகராஜ் முன் இயக்கிய கைதி படத்தின் ரெபரன்ஸ் இடம் பெற்றுள்ளது.விக்ரம் படத்தில் சில காட்சிகளில், லோகேஷ் கனகராஜ் முன் இயக்கிய கைதி படத்தின் ரெபரன்ஸ் இடம் பெற்றுள்ளது.விக்ரம் படத்தில் சில காட்சிகளில், லோகேஷ் கனகராஜ் முன் இயக்கிய கைதி படத்தின் ரெபரன்ஸ் இடம் பெற்றுள்ளது.

கைதி படத்தில் பிஜோய் கதாபாத்திரம் (நரேன்) , அடைக்கலம் கதாபாத்திரம் (ஹரிஷ் உத்தமன்) , அன்பு கதாபாத்திரம் (அர்ஜூன் தாஸ்) ஆகிய கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் இடம் பெற்றுள்ளன. லாரி உரிமையாளர் தீனாவும், கைதி படத்தில் கார்த்தியின் குழந்தையாக வரும் பெண் குழந்தையும் விக்ரம் படத்தில் நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj Kaithi2 Update from Karthi at Viruman Press Meet

கைதி படத்தின் அடுத்தக்கட்டமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் விக்ரம் படம், கைதி-2 & விக்ரம் -3 படங்களுக்கும் லீட் உடன் நிறைவடைகிறது. சூர்யாவின் சிறப்பு தோற்றம் இதற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது.

இந்நிலையில் விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காரத்தியிடம் 'கைதி 2 எப்போ?' என கேள்வி எழுப்பப்பட்டது.

Lokesh Kanagaraj Kaithi2 Update from Karthi at Viruman Press Meet

அதற்கு பதில் அளித்த கார்த்தி "லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் நடிகர் விஜய்யின் படம் முடிந்ததும் கைதி 2 படத்தின் வேலைகள் ஆரம்பமாகும்" என கூறியுள்ளார்.

இந்த கைதி 2 படத்தின் அப்டேட்டால் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Lokesh Kanagaraj Kaithi2 Update from Karthi at Viruman Press Meet

Also Read | பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் துல்கர் சல்மான் நடித்த "குருப்".. எந்த TV? செம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Kaithi2 Update from Karthi at Viruman Press Meet

People looking for online information on Kaithi2 Update, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.