Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

"நான் Hero ஆக.. நடு ராத்திரி வட்டிக்கு கடன் வாங்க அலைஞ்ச அப்பா" - தனுஷ் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்டு 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

dhanush opens up about his father Thiruchitrambalam

Also Read | Thiruchitrambalam: "Life-லயும் Best friend ஆயிட்டாங்க" - பிரபல ஹீரோயின் குறித்து தனுஷ்

இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு  ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவில் நடிகை நித்யா மேனன் பற்றி பேசிய நடிகர் தனுஷ், “இயக்குனர் மித்ரன் ஜவகர் இந்த திரைப்படம் விஐபி மற்றும் யாரடி நீ மோகினி இரண்டும் கலந்த ஒரு ஃபிளேவரில் இருக்கும் என்று கூறியிருந்தார். எத்தனையோ மேடைகளில் என்னுடைய தாயார் பற்றி பேசி இருக்கிறேன். இந்த மேடையில் என்னுடைய தந்தை பற்றி பேசினால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

dhanush opens up about his father Thiruchitrambalam

ஒரு குக்கிராமத்தில் இருந்து நான்கு குழந்தைகளுடன் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்,  மனைவி மட்டுமே உறுதுணை. வறுமை, கஷ்டம், பஞ்சம், பசி... எந்தெந்த வேலையோ செய்து ஒருவேளை உணவாவது குழந்தைகளுக்கு கொடுத்து விட வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர்.

சிறிதாக சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்து. அதன் மூலம் கிடைத்ததை வைத்து தான் அனுபவிக்காமல் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்தவர் பிள்ளைகளின் நலனுக்காகவே யோசித்தார். அந்த 4 குழந்தைகளுள் ஒரு குழந்தை முதலில் என்ஜினியராகவும் பிறகு இயக்குனராகவும், இரண்டு பெண் குழந்தைகள் டாக்டர்களாகவும், அந்த நான்காவது குழந்தை.... (தனுஷ் தான் அந்த 4வது குழந்தை என்பதை புரிந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்).

dhanush opens up about his father Thiruchitrambalam

(தமது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவை பார்த்து) அப்பா நான் ஹீரோ ஆக வேண்டும் என்பதற்காக, நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கும், பத்தாயிரம் ரூபாய்க்கும் வட்டிக்கு பணம் வாங்க இரவு பகலாக வண்டியில் அலைந்து  முயற்சித்தது என அத்தனையும் நான் மறக்க மாட்டேன்... நீங்கள் தான் என் ஹீரோ அப்பா” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Also Read | Thiruchitrambalam: "ஆளு கரடு முரடு.. அவர் என் டார்லிங்.. என் செல்லப்பிள்ளை" - தனுஷ் நெகிழ்ச்சி..

தொடர்புடைய இணைப்புகள்

dhanush opens up about his father Thiruchitrambalam

People looking for online information on Dhanush, Kasthuri raja, Thiruchitrambalam will find this news story useful.