Kaateri logo top
www.garudabazaar.com

"இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்காம இருந்தது.. ஆனா" - Emotional ஆன விருமன் இயக்குநர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

Karthi Viruman Director Muthaiya emotional speech

இப்படத்தில் இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் முத்தையா இதுவரை குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் விருமன் படத்தை குறித்து பேசிய இப்படத்தின் இயக்குநர் முத்தையா பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, “இதுவரை என்னுடைய எந்த திரைப்படத்துக்கும் ஆடியோ ரிலீஸ் நடந்ததே இல்லை. ஆனால் நான் பிறந்த மதுரை மண்ணிலேயே என்னுடைய திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, இத்தனை பேர் வருகை தர சிறப்பாக நடந்துள்ளது.

இதற்காக தான் இதுவரை எனது எந்த படங்களுக்கும் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காமல் இருந்தது போல... ஒரு விஷயம் நடக்காமல் தள்ளிப்போனால், அதுவும் நல்லதுக்கு தான், அதாவது அந்த விஷயத்தை விட சிறப்பான வேறொன்று நடப்பதற்காக அது நடக்கிறது என்பதை இதில் இருந்து நான் உணர்கிறேன்.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Viruman Director Muthaiya emotional speech

People looking for online information on Aditi Shankar, Bharathiraja, Karthi, Shankar, Suriya, Viruman Audio Launch Viruman, Yuvan Shankar Raja will find this news story useful.