செம லைன் அப்பில் இருக்கும் விக்ரம்.. அடுத்தடுத்து தரமான படங்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் விக்ரம் ? | karthik subbaraj may work with chiyan vikram on his next project

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடித்த சேது, பிதாமகன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில், இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் கடைசியாக கடாரம் கொண்டான் திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வேடத்தில் அசத்தினார். மேலும் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. விக்ரம் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் பிசியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், இதற்கு பிறகு விக்ரமை வைத்து இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய நடிகரும் நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அந்த நடிகர் யார் என்பது தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் விக்ரம் ? | karthik subbaraj may work with chiyan vikram on his next project

People looking for online information on Cobra, Jagame Thanthiram, Karthik Subbaraj, Vikram will find this news story useful.