777 Charlie Trailer

கமல் - லோகேஷை சந்தித்த சிரஞ்சீவி & சல்மான் கான்! இதுதான் காரணமா? வைரலாகும் போட்டோக்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன்,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரையும் சிரஞ்சீவி & சல்மான் கான் சந்தித்துள்ளது வைரல் டிரெண்ட் ஆகி வருகிறது.

Kamal Haasan Lokesh meet Salman Khan Chiranjeevi Viral Photos

Also Read | தனுஷ் நடிக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் கேரக்டர் லுக் போஸ்டர்! அடுத்த ட்ரீட்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் & துப்பறியும் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது. இரண்டாவது வாரத்தில் இந்த விக்ரம் படம் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் ஐத்ராபாத் நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

Kamal Haasan Lokesh meet Salman Khan Chiranjeevi Viral Photos

இச்சூழலில் கமல்ஹாசன் & இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து நடிகர் சல்மான் கான் & நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழத்து கூறினர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சிரஞ்சீவி -  சல்மான் கான் இணைந்து லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்கள்.2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்குவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிளம்பியுள்ளது.

Kamal Haasan Lokesh meet Salman Khan Chiranjeevi Viral Photos

காட்ஃபாதர் படத்தில் பிரித்வி ராஜ் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடித்துள்

இந்த லூசிபர் படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார்.  மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

Also Read | விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. படத்துல Hero-வோடா ROLE இதுவா.? EXCLUSIVE

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Lokesh meet Salman Khan Chiranjeevi Viral Photos

People looking for online information on Chiranjeevi, Kamal Haasan, Lokesh Kanagaraj, Salman Khan will find this news story useful.