777 Charlie Trailer

"முழுக்க ஒரு காதல் படம் பண்ணுவீங்களா..?" கேள்வி கேட்ட ரசிகர்.. 'நச்' பதில் அளித்த லோகேஷ் கனகராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காதல் வகைமையில் படத்தை இயக்குவது குறித்து டிவீட் செய்துள்ளார்.

Lokesh Kanagaraj Tweet about Romance Genre Films

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக, விஜய்யை வைத்து  'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.

Lokesh Kanagaraj Tweet about Romance Genre Films

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj Tweet about Romance Genre Films

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.

Lokesh Kanagaraj Tweet about Romance Genre Films

இந்நிலையில் விக்ரம் படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்வி பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். டிவிட்டர் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு ப்ரோமோட் செய்யப்பட்டது. இதில் ரசிகர் ஒருவர், " முழு நீள காதல் திரைப்படங்கள் பண்னுவீங்களா" என கேட்ட கேள்விக்கு, லோகெஷ் "கஷ்டம் ப்ரோ" என பதில் அளித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Tweet about Romance Genre Films

People looking for online information on Kaithi, Lokesh Kanagaraj, Master, Vikram will find this news story useful.