www.garudabazaar.com

'அரபிக் குத்து' ஜானி மாஸ்டரை இயக்கிய ஐஸ்வர்யா.. வெளியான 'பயணி' ஆல்பம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி ஆல்பம் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Johny master aishwarya rajinikanth payani album released

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதன் பிறகு அவர் இயக்கியுள்ள பயணி ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.

Johny master aishwarya rajinikanth payani album released

மருத்துவமனையில் அனுமதி

இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு அவர் மகளிர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அங்கிருந்த படியே தொடர்ந்து பயணி ஆல்பத்தின் அப்டேட்களை வெளியிட்டு வந்தார்

Johny master aishwarya rajinikanth payani album released

9 ஆண்டுகளுக்குப் பிறகு…

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இந்த பாடலை ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டது போல மலையாள வெர்ஷனை மோகன்லால் மற்றும் தெலுங்கு வெர்ஷனை அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர், இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 'பயணி'யை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், "உங்கள் மியூசிக் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் ஃப்ரண்ட். கடவுள் அருள் புரியட்டும்" என தன்னுடைய ட்வீட்டில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

Most wanted ஜானி மாஸ்டர்

இந்த பாடல் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த பாடலுக்கு தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடன இயக்குனர்களில் ஒருவரான ஜானி மாஸ்டர் கொரியோகிராஃப் செய்துள்ளார். இதையடுத்து பாடலின் நடன வடிவமைப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும் வை ராஜா வை திரைப்படத்துக்கு பிறகு சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்தின் பக்கம் திரும்பியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த பாடலின் மீது அதிக நம்பிக்கை வைத்து தொடர்ந்து இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து வந்த அவர், இப்போது மகிழ்ச்சியாக பாடலை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Johny master aishwarya rajinikanth payani album released

People looking for online information on Aishwarya, Dhanush, Payani, Rajinikanth will find this news story useful.