www.garudabazaar.com

இது நல்லாருக்கு.. ஃபோட்டோவுடன் 'பேச்சிலர்' திவ்யபாரதி பகிர்ந்த செம்ம கேப்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திவ்யபாரதி சமீபத்தில் பகிர்ந்துள்ள அவரின் புகைப்படமும் அதற்கு கொடுத்துள்ள கேப்ஷனும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Actress divyabharathi latest dazzling photos

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அடுத்த படைப்பு.. தனுஷ் வாழ்த்து.. படு வைரலாகும் ட்வீட்

பேச்சிலர் அறிமுகம்

தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கதாநாயகியின் நடிப்புக்கு என்று தனியாக பாராட்டு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் கண்களில் மிகவும்  பிரகாசமாக தெரிகிறார். மேலும் தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை எனவும் கூறினார்.

Actress divyabharathi latest dazzling photos

அடுத்தடுத்த படங்கள்

பேச்சிலர் படத்துக்கு அடுத்ததாக இப்போது 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் அவரேக் கூறியுள்ளார். மேலும்  திவ்யபாரதிக்கு அடுத்த வாய்ப்பாக மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சோஷியல் மீடியாவில் ஆர்வம்

சமூகவலைதளங்களில் இப்போது மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகையாக உருவாகி உள்ளார் திவ்யபாரதி. தனது கிளாமர் புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவேற்றி வருகிறார். அதுபோலவே சமீபத்தில் ஹிட்டடித்த அரபிக்குத்து பாடலுக்கும் ரீல்ஸ் வீடியோ உருவாக்கி வெளியிட்டு இருந்தார். அதுபோல ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார். இதையடுத்து திவ்யபாரதிக்கு சமூகவலைதளங்களில் ஏராளமாக பாலோயர்ஸ்கள் உருவாகியுள்ளனர்.

Actress divyabharathi latest dazzling photos

கவனத்தை ஈர்த்த புகைப்படம்

இதையடுத்து இப்போது திவ்யபாரதி பகிர்ந்துள்ள அழகான புகைப்படமும் அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனும் கவனத்தை ஈர்த்துள்ளன. கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் அவர் ‘ஒவ்வொரு முறையும்… சாதாரண வாழ்க்கையின் நடுவே அன்பு அழகான கதை சொல்கிறது’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கு நெல்சன் சொன்ன situation இதுதான்… பாடலாசிரியர் பகிர்ந்த தகவல்

Actress divyabharathi latest dazzling photos

People looking for online information on திவ்யபாரதி, பேச்சிலர், Bachelor, Divyabharathi, Divyabharathi Latest news will find this news story useful.