www.garudabazaar.com

“Workmode on” … ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்த நடிகர்- அடுத்த படக் கூட்டணியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajinikanth meeting with Lawrence and shared a photo

BOX OFFICE: ராதே ஷ்யாம் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் இம்புட்டு கோடியா? செம சம்பவம்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர மனமொத்து தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தனுஷ் தான் ஒப்புக்கொண்ட படங்களில் கவனம் செலுத்திவர, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது முசாபீர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு அவர் மகளிர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

Aishwarya Rajinikanth meeting with Lawrence and shared a photo

முசாபீர் ஆல்பம்

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியுள்ள முசாபிர் ஆல்பம் குறித்து ஆர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிவருகிறார்.  இது சம்மந்தமாக சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மறுபடியும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருந்தார்.

லாரன்ஸுடன் சந்திப்பு

Aishwarya Rajinikanth meeting with Lawrence and shared a photo

இந்நிலையில் தற்போது அவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸை சந்தித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ‘verified… லாரன்ஸ் அண்ணாவுடனான சந்திப்புக்குப் பிறகு என் மூளை துடிக்கிறது. Workmode on #எங்கேயும் #எப்போதும் #என்னவாக இருந்தாலும்’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் அவரின் கருத்துகளை வைத்து பார்க்கும் போது விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தின் கீழ் கமெண்ட் செய்து தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

”வாழு வாழவிடு" திடீரென பிரபல த்ரோபேக் statement-ஐ பகிர்ந்த அஜித்தின் மேலாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth meeting with Lawrence and shared a photo

People looking for online information on Aishwarya Rajinikanth, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், Lawrence, Workmode on will find this news story useful.