www.garudabazaar.com

டிக்கிலோனா-வை அடுத்து சந்தானத்தின் இந்த நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட படமும் ஓடிடியிலா??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் சர்வர் சுந்தரம். பழம்பெரும், நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து ஹிட் அடித்த படம் ‘சர்வர் சுந்தரம்’. இதே படத்தின் தலைப்பில்தான் தற்போதைய தமிழ்த் திரையுலகில் காமெடியனாக இருந்து காமெடி படங்களில் ஹீரோவாக மலர்ந்திருக்கும் சந்தானம் நடித்துள்ளார்.

is Santhanam Server Sundaram movie ready for OTT? deets

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். சந்தானத்துடன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடிக்கிறார். இவர்களுடன் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

is Santhanam Server Sundaram movie ready for OTT? deets

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த பட வெளியீட்டுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தேதி முடிவு செய்யப்பட்டு பின் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

is Santhanam Server Sundaram movie ready for OTT? deets

ஆனால் இதை பற்றி நாம் இப்படத்தில் நடித்த பிஜேஷ் நாகேஷ் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், “அதே சமயம் உறுதிப்படுத்தப் படாத இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக காத்திருங்கள், உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மிக அண்மையில்தான் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா எனும் காமெடி டைம் டிராவல் திரைப்படம் Zee5 ஓடிடியில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

is Santhanam Server Sundaram movie ready for OTT? deets

அதன்படி டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி  Zee5 ஓடிடியில் நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானத்துடன் யோகிபாபு, ஆனந்த ராஜ், முனீஷ் காந்த், மாறன், மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். 

Also Read: மரண மாஸ்! பிரம்மாண்ட #KGFChapter2-ன் தென்னிந்திய மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

is Santhanam Server Sundaram movie ready for OTT? deets

People looking for online information on Bijesh Nagesh, OTT, Santhanam, Server Sundaram will find this news story useful.