www.garudabazaar.com

சந்தானத்தின் கொல மாஸ் "காமெடி படம்".. ஓடிடி ரிலீஸ் தேதி இதான்... மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டைம் டிராவல் காமெடி கான்செப்ட் திரைப்படம் 'டிக்கிலோனா'.

santhanam dikkiloona OTT release date சந்தானம் டிக்கிலோனா ரிலீஸ்

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் சந்தானம் 3 கெட்டப்களில் தோன்றுவார். அதாவது டைம் டிராவல் மூலமாக 3 காலங்களில் பிரவேசிக்கும் 3 சந்தானங்களும் சந்தித்துக் கொள்ளும் காட்சி, இப்படத்தின் டிரெய்லரில் இடம் பெறும்.

முன்னதாக இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் தான்  டிக்கிலோனா படம் Zee5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சந்தானத்தின் இந்த அதகள காமெடி திரைப்படம்  Zee5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானத்துடன் யோகிபாபு, ஆனந்தராஜ், முனீஷ்காந்த், மாறன், மனோகர் என நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளனர்.

Also Read: படு trending-ல் நடிகையின் மாலத்தீவு விசிட்.. நீச்சல் உடையில் சக்கை போடு போடும் viral ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

santhanam dikkiloona OTT release date சந்தானம் டிக்கிலோனா ரிலீஸ்

People looking for online information on Dikkiloona, Santhanam will find this news story useful.