Baakiyalakshmi: இந்த ரணகளத்துலயும் நம்ம ‘பஞ்சாயத்து’ கோபி செஞ்ச காரியம் - மீண்டும் புயலான பாக்யா.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய காட்சிகளாக பரபரப்பான திருப்பம் நிறைந்த காட்சிகள் அரங்கேறின.
![Gopi mistakenly calls Baakiya as radhika Baakiyalakshmi promo Gopi mistakenly calls Baakiya as radhika Baakiyalakshmi promo](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/gopi-mistakenly-calls-baakiya-as-radhika-baakiyalakshmi-promo-photos-pictures-stills.jpg)
இதனடையில் பல நாட்களாக பாக்கியலட்சுமிக்கு துரோகம் பண்ணிக் கொண்டு வந்திருந்த கோபி, ராதிகா என்கிற இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் வரையில் சென்று விட்டார். ஆனால் பாக்கியலட்சுமியும் ராதிகாவும் ஒருவருக்கொருவர் நல்ல தோழிகள் என்கிற விஷயம் அவர்கள் இருவருக்குமே தற்போது தெரிய வந்தது.
அத்துடன் பாக்கியலட்சுமிக்கு தன் கணவர் கோபி, ராதிகாவுடன் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது விட்டது. இதைத் தொடர்ந்து வீட்டில் அனைவரும் முன்னிலையிலும் வைத்து கோபியை விசாரித்த பாக்கியலட்சுமி, கோபமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். அதன் பின்னர் சிறிது சிந்தித்துப் பார்த்த கோபி, பாக்கியலட்சுமியை பேசி சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வரலாம் என்று அவரைப் பார்க்க செல்கிறார்.
பாக்கியலட்சுமி தம்முடைய சமையல் பணிகளை செய்யும் அலுவலகத்தில் தனிமையில் அமர்ந்திருக்க, அப்போது தன்னை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்லவரும் கோபியிடம், “மீண்டும் நீங்கள் இந்த தவறை செய்ய மாட்டீர்கள் என்று என்ன உத்தரவாதம்.” என்று பாக்கியலட்சுமி ஆவேசமாக கேட்கிறார். அதற்கு நம் அப்பிராணி கோபி, பாக்கியலட்சுமி கையில் சத்தியம் செய்வதாக சென்று, “சத்தியமாக சொல்கிறேன் ..நீ தான் என் வாழ்க்கை ராதிகா” என்று தம்முடைய மனைவி பாக்கியலட்சுமி பெயரை மறந்துவிட்டு, தான் உறவில் இருக்கும் ராதிகாவின் பெயரை தன்னிச்சையாக சொல்கிறார்.
இதை கேட்ட பாக்கியலட்சுமிக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது. இனி பாக்கியலட்சுமி பத்திரகாளி லட்சுமி ஆக மாறுவது மட்டும் உறுதி என்கின்றனர் பாக்கியலட்சுமி ரசிகர்கள்.