Kaateri logo top
www.garudabazaar.com

பிரபல OTT-யில் ரிலீசாகும் சாய் பல்லவி நடித்த 'கார்கி'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Gargi starring Sai Pallavi arrives on Sony LIV on August 12

Also Read | சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அறிவிப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சாய்பல்லவி நடித்த ’கார்கி’ படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கார்கி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா தம்பதியர் தங்களது 2டி நிறுவனம் மூலம் வழங்கினர்.

Gargi starring Sai Pallavi arrives on Sony LIV on August 12

கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Gargi starring Sai Pallavi arrives on Sony LIV on August 12

பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஒடிடி  ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான சோனி லிவ் கைப்பற்றி உள்ளது.

Gargi starring Sai Pallavi arrives on Sony LIV on August 12

ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் கார்கி திரைப்படம் சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும். இதற்கான அறிவிப்பு டிரெய்லரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. வில்லனாக மிஷ்கின்! வெளிவந்த கொலமாஸ் அப்டேட்

பிரபல OTT-யில் ரிலீசாகும் சாய் பல்லவி நடித்த 'கார்கி'.. எப்போ? எதுல? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gargi starring Sai Pallavi arrives on Sony LIV on August 12

People looking for online information on GARGI, Gargi Movie, Sai Pallavi, Sony LIV will find this news story useful.