Maha
www.garudabazaar.com

சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் சேட்டிலைட் உரிமம்.. கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Gargi Movie Satellite TV Rights Bagged by Kalaignar TV

Also Read | பிரபல OTTயில் ரிலீசாகும் "ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்".. ரிலீஸ் எப்போ? முழு தகவல்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சாய்பல்லவி நடித்த ’கார்கி’ படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். கார்கி  படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றி உள்ளது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா இணையர் தங்களது 2டி நிறுவனம் மூலம் வழங்குகின்றனர்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Gargi Movie Satellite TV Rights Bagged by Kalaignar TV

சென்னையில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் சாய் பல்லவி,  சிறார் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்படும் தனது தந்தையை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி எப்படி மீட்கிறார் என்பதை அழுத்தமாக சொல்லும் படம்தான் கார்கி.

மேலும் திரைக்கதையின் இறுதியில் சமூகத்தில் தாக்கம் ஏற்பட கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய திருப்பத்தை உள்வைத்து இயக்குனர் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

Gargi Movie Satellite TV Rights Bagged by Kalaignar TV

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது. இதனை படத்தின் திரையரங்க டைட்டிலில் படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | S.J சூர்யாவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான போஸ்டருடன் வாழ்த்திய 'மார்க் ஆண்டனி' படக்குழு!

தொடர்புடைய இணைப்புகள்

Gargi Movie Satellite TV Rights Bagged by Kalaignar TV

People looking for online information on Gargi Movie, Kalaignar TV, Sai Pallavi will find this news story useful.