www.garudabazaar.com

ப்பா, BTS வீடியோவே சும்மா அள்ளுதே.. பகத் பாசில் அர்ப்பணிப்பு.. மிரள வைக்கும் Malayankunju வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பகத் ஃபாசில். ஒவ்வொரு படத்திலும் மிக மிக வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் பகத் ஃபாசில், கடந்த ஜூன் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் நடித்திருந்தார்.

fahadh faasil next malayankunju bts video released

இதனைத் தொடர்ந்து, பகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள 'மலையன்குஞ்சு' திரைப்படம் வெளியாக உள்ளது.

ஜூலை மாதம் 22 ஆம் தேதி, மலையன்குஞ்சு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை சஜிமோன் பிரபாகர் இயக்கி உள்ளார். மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், மலையன்குஞ்சு படத்தின் திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். பகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

fahadh faasil next malayankunju bts video released

பகத் ஃபாசிலுடன், ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மலையன்குஞ்சு படத்தின் முதல் டிரைலர், பல மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இதன் பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் சிங்கிளான "சோலப்பெண்ணே" என்ற பாடலும் வெளியாகி இருந்தது.

முப்பது வருடங்களுக்கு பின், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் மலையாள திரைப்படம் மலையன்குஞ்சு என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கிள் பாடலைத் தொடர்ந்து, மலையன்குஞ்சு திரைப்படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதன் மூலம், மழை பெய்து ஏற்படும் நிலச்சரிவில், பகத் ஃபாசில் சிக்கிக் கொள்ளும் ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படமாக மலையன்குஞ்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

fahadh faasil next malayankunju bts video released

இந்நிலையில், தற்போது மலையன்குஞ்சு படத்தின் Behind the Scenes வீடியோ ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நிலச்சரிவில் பகத் ஃபாசில் சிக்குவது போன்ற காட்சிகள் தொடர்பான செட்கள் உருவாக்கப்பட்டது தொடர்பானவை, இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், அதிக அர்ப்பணிப்புடன் பகத் ஃபாசில் நடித்துள்ளதும், இந்த BTS வீடியோ மூலம் தெரிய வருகிறது. மலையன்குஞ்சு படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் மிக கடினமாக உழைத்து, காட்சிகள் உருவாக்கியுள்ளதும் தெரிய வரும் நிலையில், மேக்கிங் வீடியோவை பார்ப்பவர்களையும் மிரண்டு போக செய்துள்ளது.

fahadh faasil next malayankunju bts video released

இதனால், மலையன்குஞ்சு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

fahadh faasil next malayankunju bts video released

People looking for online information on AR Rahman, BTS Video, Fahadh Faasil, Mahesh Narayanan, Malayankunju, Sajimon will find this news story useful.