www.garudabazaar.com

"ஒவ்வொரு Fight க்கும் பின்னாடி எவ்ளோ பெரிய உழைப்பு.! வெளியான Vikram 'BTS' வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் 'விக்ரம்'.

Vikram movie action sequence bts video released

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாகி இருந்த 'விக்ரம்' திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அது மட்டுமில்லாமல், பல இடங்களில் நிறைய கலெக்ஷன் சாதனைகளை முறியடித்த விக்ரம் திரைப்படம், இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் வெற்றி பெற்றிருந்தது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை..

திரையரங்கில் வெளியாகி அசாத்திய வெற்றி பெற்ற 'விக்ரம்', கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காயத்ரி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Vikram movie action sequence bts video released

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். விக்ரம் படத்தில் எமோஷன், சண்டைக் காட்சி, பாடல்கள் மற்றும் பின்னணி இசை, திரைக்கதை என அனைத்தும் அசத்தலாக இருந்ததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த திரைப்படம் கவர்ந்திருந்தது.

மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள்..

அதிலும் குறிப்பாக, விக்ரம் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் படு மிரட்டலாக அமைந்திருந்தது. கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என அனைவரின் சண்டைக் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருந்தது. இதனை இரட்டையர்களான பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கி இருந்தனர். இந்நிலையில், விக்ரம் படத்தின் ஆக்ஷன் சீன்களின் BTS வீடியோ, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

"இது Lifetime Settlement"

இது தொடர்பான வீடியோவை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ், தங்களின் கேப்ஷனில், "கமல்ஹாசன் சாருக்காக சண்டைக் காட்சிகள் அமைப்பது என்பது அரிதான அனுபவங்களை விட அரிதான ஒன்று. விக்ரம் படம் எங்களுக்கு ஒரு பேரின்பம் தான். லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், இது Lifetime Settlement" என குறிப்பிட்டுள்ளனர்.

Vikram movie action sequence bts video released

மேலும், அன்பறிவ் பகிர்ந்த BTS வீடியோ மூலம், விக்ரம் படத்தின் சண்டைக் காட்சிகளை எவ்வளவு அர்ப்பணிப்புடன் படக்குழுவோடு சேர்ந்து உருவாக்கினார்கள் என்பது தெரிய வருகிறது.

"ஒவ்வொரு FIGHT க்கும் பின்னாடி எவ்ளோ பெரிய உழைப்பு.! வெளியான VIKRAM 'BTS' வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie action sequence bts video released

People looking for online information on Anbariv, Fahadh Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram, Vikram BTS will find this news story useful.