www.garudabazaar.com

PS1: "தமிழன்.. தமிழன்னு சொல்லிக்கிறோம்.. அப்படி என்ன நாம பெரியாள்னா தெரியாது!" - கார்த்தி பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Karthi Speech Ponniyin Selvan meet Maniratnam AR Rahman Trisha

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் கால கட்டத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து  திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா,  மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை பற்றி இவ்விழாவில் நடிகர் கார்த்தி பேசியுள்ளார். இதில் பேசிய நடிகர் கார்த்தி, “எனக்கு இது முக்கியமான மேடை. மணி சாரின் உதவி இயக்குனராக இருந்த எனக்கு இப்படி ஒரு மேடையை அவர் கொடுத்திருக்கிறார்.

நான் ஹிஸ்டரி கிளாஸில் தூங்குவதே தெரியாமல் லைட்டாக தூங்கி விடுவேன். அப்படி தூங்கும் நேரத்தில் கூட நாம் அறிந்த வரலாறு நம்மை யார் ஆண்டார்கள்,நாம் எப்படி சூறையாடப்பட்டோம், நம்மை யார் அடிமைப்படுத்தினார்கள் என்கிற வரலாற்றை அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனாலும் நாம் தமிழன்.. தமிழன்.. என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.. அப்படி என்ன நாம் பெரிய ஆள்.? என்றால் இந்த கேள்விக்கு பலருக்கும் பதில் தெரியாது..

நம் மன்னர்கள் எப்படி இருந்தார்கள்.. நம் நாடு எப்படி இருந்தது.. அரசாட்சி எப்படி இருந்தது? என்பது பலருக்கும் தெரியாது. அதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. 2000 வருடத்திற்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் இருக்கிறது, வீரநாராயணன் ஏரி என்று சொல்லக்கூடிய வீராணம் ஏரியில் இருந்து முன்பு சென்னைக்கு தண்ணீர் வந்ததும்.   ஏரியை சோழர்கள் தன் படையை வைத்து கட்டினர்.

நம்முடைய தஞ்சை பெரிய கோவில், வெள்ளைக்காரர்கள் எல்லாம் படகில் வந்து கரை ஓரம் தான் சவாரி செய்தார்கள், நம் ஆட்கள்தான் கடல் தாண்டி பயணம் செய்தவர்கள். இன்று வரை தமிழக அரசு பின்தொடர்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ நலத்திட்டங்கள் அந்த காலத்தில் சோழர்கள் கொண்டு வந்தது தான். இப்படி எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் வீடியோவில் பார்த்து தள்ளிவிடும், நமக்கு படிப்பதற்கு நேரம் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் மாதிரி.. மணிரத்னம் சார் கொண்டு வந்து கொடுத்திருப்பது என்பது அடுத்த தலைமுறைக்கு அவர் கொடுக்கும் பரிசு என்று நான் சொல்வேன். வரலாறு படிக்காமல் வரலாறு படிக்க முடியாது.. இதை பார்க்கும் பொழுது ஒரு பெருமிதம் வரும், இதை நாம் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் வரும், அப்போது நமக்கு ஒரு படி முன்னேற்றம் வரும், இவ்வளவு பெரிய பரிசு கொடுத்த மணிரத்னம் சாருக்கு நான் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

PS1: "தமிழன்.. தமிழன்னு சொல்லிக்கிறோம்.. அப்படி என்ன நாம பெரியாள்னா தெரியாது!" - கார்த்தி பேச்சு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Speech Ponniyin Selvan meet Maniratnam AR Rahman Trisha

People looking for online information on Jayam Ravi, Karthi, Lyca Productions, Madras Talkies, Mani Ratnam, Ponniyin Selvan 1, Ponniyin Selvan part 1, PS 1, Ta, Trisha, Vikram will find this news story useful.