Reliable Software
www.garudabazaar.com

Video: ஃபகத் ஃபாசிலின் இருள் .. 'சீரியல் கில்லரா?'.. மிரட்டும் டிரெய்லர்! எப்போ? எதுல? ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராகவும், தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகராகவும் வலம் வருபவர் ஃபகத் ஃபாசில்.

Fahadh Faasil Irul Trailer and Release Netflix OTT

தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன், விஜய் சேதுபதியுடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஃபகத் ஃபாசிலுக்கு தமிழிலும் ரசிகர்கள் உண்டு. இந்த படங்களில் தமது கதாபாத்திரத்தை திறமாகவும் உயிரோட்டத்துடன் நடித்திருப்பார்.

மலையாளத்திலும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் படங்கள் அப்படித்தான். அண்மையில் ரான்ஸ் படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ஃபகத் ஃபாசில், கடைசியாக அமேசான் தளத்தில் வெளியான சீ யூ சூன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

முழுக்க முழுக்க ஐ போனில் எடுக்கப்பட்ட இந்த படம் புதுமுயற்சியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படி படத்துக்கு படம் கேரக்டரில் வெரைட்டி காட்டும் ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பில் தற்போது இருள் எனும் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அத்துடன் இந்த இருள் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த டிரெய்லரைக் காணும்போது இளம் பெண்களை கடத்தி கொலை செய்யும் த்ரில்லர் கதையில் சீரியல் கில்லராக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

இந்த படத்தில் ஃபகத் ஃபாசிலுடன் தர்ஷனா ராஜேந்திரன், சவுபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். நசீப் யூசுப் இசுதீன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 2-ஆம் தேதி நேரடியாக நேட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

ALSO READ: குழந்தைகளைக் கவர்ந்த க்யூட் டெடி பொம்மையா நடிச்சது இவர்தான்!.. ரிவீல் செய்த படக்குழு!

தொடர்புடைய இணைப்புகள்

Fahadh Faasil Irul Trailer and Release Netflix OTT

People looking for online information on Darshana Rajendran, Fahadh Faasil, Irul, IrulTrailer, Netflix, OTT will find this news story useful.