www.garudabazaar.com

தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. வாத்தி படத்தின் அட்டகாசமான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Movie New Poster Released for Diwali

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி , இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.  ‘வாத்தி (Sir)’ படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சீருடையில் தனுஷ், சண்டையிடுவது போல போஸ்டர் அமைந்துள்ளது.

Dhanush Vaathi Movie New Poster Released for Diwali

இந்த படத்தின் ஒட்டுமொத்த ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமையை பிரபல வினியோகஸ்தர் உமா மகேஸ்வர ராவ் கண்டா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர்  திரைப்படம் அடுத்து தயாராகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie New Poster Released for Diwali

People looking for online information on Dhanush, Diwali, Vaathi will find this news story useful.