www.garudabazaar.com

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் எப்போ ரிலீஸ்?.. வெளியான செம்ம தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

Varisu Vijay Movie first single will be released on Diwali

Also Read | GP Muthu : "இந்த காரணத்துக்குதான் அவர எனக்கு பிடிக்கும்.!" - GP முத்துவுக்கு கமல் புகழாரம்.!

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

Varisu Vijay Movie first single will be released on Diwali

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Varisu Vijay Movie first single will be released on Diwali

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

Varisu Vijay Movie first single will be released on Diwali

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு சண்டை காட்சிகள் சென்னையில் எடுக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Also Read | Bigg boss 6 tamil : “பிக்பாஸ்-ல இருப்பவர்களில் இவங்க 2 பேரும்தான் எனக்கு ஹீரோயின்ஸ்!” - GP முத்து பதில்ஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay Movie first single will be released on Diwali

People looking for online information on Diwali, Varisu, Varisu Vijay Movie first single, Vijay will find this news story useful.