www.garudabazaar.com

VIP தனுஷின் டிரேட் மார்க் ஃபைட் சீனுடன் "வாத்தி" படத்தின் தெறிக்கும் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

Dhanush Trademark Fight Scene Sir Movie Poster Released

Also Read | லோக்கல் ரயிலில் பயணம் செய்த விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே! இதான் காரணமா?

நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்

ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை அறிவிக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் குறித்து இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், கல்லூரி கதைக்களத்தில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்பதையும் பறைசாற்றியது.

Dhanush Trademark Fight Scene Sir Movie Poster Released

அது மட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தின. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சார் / வாத்தி படத்தின்  இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. அதில் சரஸ்வதி சிலையின் முன்பாக தனுஷ் தனது கையை உயர்த்தி நிற்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது. ஏற்கனவே முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Dhanush Trademark Fight Scene Sir Movie Poster Released

இந்த படத்தின் டீசர் நேற்று தனுஷின் பிறந்தநாள் முன்னிட்டு (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாகி இருக்கிறது. வெளியான 12 மணி நேரத்தில் டீஸர் யூடியூப் டிரெண்டில் முதல் இடத்தில் உள்ளது. 230,000 லைக்குகளை‌ பெற்று வைரலாகி வருகிறது.  இதனை தெரிவிக்கும் வகையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் டிரேட் மார்க் சண்டை காட்சி போஸடராக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற சண்டைக்காட்சிகள் பொல்லாதவன் படத்தின் கிளைமாக்ஸ், வேலையில்லா பட்டதாரி, VIP-2 படங்களிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush Trademark Fight Scene Sir Movie Poster Released

வாத்தி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன், சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Dhanush Trademark Fight Scene Sir Movie Poster Released

'வாத்தி' படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read | உலகச் சுற்றுலாவில் பூஜா ஹெக்டே.. அடுத்த நாடு இதுதானாம்! LATEST போட்டோவுடன் சொன்ன தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Trademark Fight Scene Sir Movie Poster Released

People looking for online information on Dhanush, Dhanush Vaathi Movie, Vaathi Movie, Vaathi Movie Trademark Fight Scene will find this news story useful.