Battery
The Legend
www.garudabazaar.com

Life of Pazham: அனிருத் குரலில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அடுத்த சிங்கிள்.. செம்ம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் Life of Pazham வெளியாகி உள்ளது.

Anirudh Life of Pazham Dhanush Thiruchitrambalam Movie Single Song

Also Read | BREAKING: விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. மதுரைல எங்கே நடக்குது? முழு தகவல்

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

Anirudh Life of Pazham Dhanush Thiruchitrambalam Movie Single Song

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'லைப் ஆஃப் பழம்' எனும் தலைப்பில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல்  வெளியாகி உள்ளது. இந்த  சிங்கிள் பாடல் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் குரலில் இன்று (ஜூலை  27) இந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை தனுஷ் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Anirudh Life of Pazham Dhanush Thiruchitrambalam Movie Single Song

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Anirudh Life of Pazham Dhanush Thiruchitrambalam Movie Single Song

Also Read | BREAKING: உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Life of Pazham Dhanush Thiruchitrambalam Movie Single Song

People looking for online information on Anirudh, Anirudh Life of Pazham, Dhanush, Dhanush Thiruchitrambalam Movie, Dhanush Thiruchitrambalam Movie Single Song, Thiruchitrambalam Movie will find this news story useful.