Battery
The Legend
www.garudabazaar.com

அடர்ந்த காட்டில் வேடன் லுக்கில் தனுஷ்.. 'நானே வருவேன்' படத்தின் வேறலெவல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் புதிய  போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dhanush Naane Varuven Movie Birthday Poster Released

Also Read | லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் விராத் & அனுஷ்கா.. சமையல் கலைஞருக்கு கொடுத்த செம சர்ப்ரைஸ்!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

Dhanush Naane Varuven Movie Birthday Poster Released

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

Dhanush Naane Varuven Movie Birthday Poster Released

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு தனுஷின் லுக் உள்ள படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. வில் அம்புடன் நவநாகரீக தோற்றத்தில் காட்டில் தனுஷ் இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.

Dhanush Naane Varuven Movie Birthday Poster Released

இந்த போஸ்டரில் 'இறுதிக்கட்ட பணியில்' என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்த ரசிகர்.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie Birthday Poster Released

People looking for online information on Dhanush, Dhanush Naane Varuven Movie, Naane Varuven Movie will find this news story useful.