Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

தனுஷ் கொடுத்த டபுள் ட்ரீட்! "நானே வருவேன்" படத்தின் புதிய போஸ்டர்.. செம கேப்சனுடன் வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது.

Dhanush to play a dual role in Selva Raghavan Naane Varuven Movie

தனுஷ் கொடுத்த டபுள் ட்ரீட்! "நானே வருவேன்" படத்தின் புதிய போஸ்டர்.. செம கேப்சனுடன் வெளியீடு!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இந்த படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. 

இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.

Dhanush to play a dual role in Selva Raghavan Naane Varuven Movie

இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்று இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி உள்ளது. 

Dhanush to play a dual role in Selva Raghavan Naane Varuven Movie

டபுள் தமாக்கா

இந்த படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் மூலம் அறிய முடிகிறது. போஸ்டரில் DUO: An Epic Journey என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் தனுஷ் இருப்பது போல் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. மேலும் தாடி மீடையுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு தனுசும். தாடி இல்லாமல் ஒரு தனுசும் போஸ்டரில் காட்சி அளிக்கின்றனர். 

Dhanush to play a dual role in Selva Raghavan Naane Varuven Movie

வாத்தி

நானே வருவேன் படத்தின் ஊடவே தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ளது. 

மாறன்

மேலும் தனுஷ் நடித்த மாறன் படம் தியேட்டர் ரிலீசை தவிர்த்து நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது. 

பரபர முத்தக்காட்சிகளுடன் மன்மதன் வெளியிட்ட மன்மத லீலை படத்தின் GLIMPSE!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush to play a dual role in Selva Raghavan Naane Varuven Movie

People looking for online information on தனுஷ், Dhanush, Indhuja, Naane Varuven, Selva Raghavan, Yuvan Shankar Raja will find this news story useful.