www.garudabazaar.com

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து : டிவிட்டர் டிரெண்டிங்கில் ரசிகர்களின் நம்பிக்கை வார்த்தைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி  தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பாக டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

நேற்று இரவு இருவரும் பிரிவதாக தனித்தனியே அறிக்கை வெளியிட்டனர். அதில் "18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்" என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

இந்த தகவல் வெளியானதிலிருந்து டிவிட்டரில் தனுஷ், ரஜினி, ஐஸ்வர்யா என்ற பெயர்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ரஜினி, தனுஷ் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். அதிலும் தனுஷ் ரசிகர்கள் WE ARE WITH U DHANUSH ANNA என டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த டிரெண்ட் இந்திய அளவில் 6வது இடத்தில் உள்ளது.  8 ஆயிரத்திற்கும் மேல் டிவிட்டுகள் குவிந்து வருகின்றன. சில ரசிகர்கள் தனுஷ் படங்கள் ஓடிடியில் வருவது, விவாகரத்து போன்ற விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளனர். உங்களின் கடினமான சூழலில் நாங்கள் உங்கள் உடன் இருப்போம் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Fans Supports Dhanush for Aishwaryaa Divorce

People looking for online information on Aishwarya, Dhanush, Dhanush Divorce, Dhanush Divorced, Rajinikanth will find this news story useful.