www.garudabazaar.com

Dhanush New Movie: தனுஷ் மூன்றாவது முறையாக பிரபல முன்னணி இயக்குனருடன் இணைகிறாரா? அடுத்த சம்பவம் ரெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: தனுஷ் மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணைய உள்ளார்.

Dhanush and Aanand L Rai reunite for a new love story

ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் மூலம் நடிகர் தனுஷை 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். இவர் இயக்கத்தில் தனுஷ் 2வது முறை மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே. நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது. அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் சென்ற டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியானது‌. 

Dhanush and Aanand L Rai reunite for a new love story

வெளியான முதல் நாளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை அத்ரங்கி ரே படம் பெற்றது. இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. இந்நிலையில் தனுஷ் ராஞ்சனா & அத்ரங்கிரே படத்திற்குப் பிறகு, மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் ஒரு அதிரடி காதல் கதைக்காக மீண்டும் இணைகின்றார். இது போக மேலும் ஒரு படத்திற்காக பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளருடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush and Aanand L Rai reunite for a new love story

தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. மாறன் படம் ஒடிடி வெளியீடிற்கு தயாராகி வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

Dhanush and Aanand L Rai reunite for a new love story

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush and Aanand L Rai reunite for a new love story

People looking for online information on Aanand L Rai, AtrangiRe, தனுஷ், தனுஷ் அடுத்த படம், தனுஷ் புதிய படம், Bollywood, Dhanush, Dhanush New Movie, Kollywood, Raanjhanaa will find this news story useful.