www.garudabazaar.com

கேப்டன் அமெரிக்காவுடன் 'கைகோர்த்த' தனுஷ்... வேற லெவல் 'சம்பவம்' வெயிட்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கர்ணன், ஜெகமே தந்திரம் மற்றும் அத்ராங்கி ரே(இந்தி) ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தி கிரே மேன்' என்னும் படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார். மார்க் கிரேனியின் கிரே மேன் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Dhanush joins Avengers director for Netflix film the gray man

இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவென்ஜர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கும் இப்படத்தில் கேப்டன் அமெரிக்கா என ரசிகர்களால் கொண்டாடப்படும் கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ், வாக்னர் மோரா, ஜெசிக்கா ஹென்விக், ஜுலியா பட்டர்ஸ் போன்ற பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து தனுஷ் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன் ' தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்' என்னும் ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhanush

Dhanush joins Avengers director for Netflix film the gray man

People looking for online information on Dhanush will find this news story useful.