www.garudabazaar.com

'யாமிருக்க பயமே' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. வெளியானது 'காட்டேரி' படத்தின் டிரெய்லர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் 'காட்டேரி’. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

vaibhav stares katteri thrilling trailer released வெளியானது 'காட்டேரி' படத்தின் டிரெய்லர்

படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் கோரோனா காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக 'காட்டேரி' திரையரங்குகளில் வெளியாகும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நொடிக்கு நொடி பரபரப்பு என வித்தியாசமான கோர்வையாக இந்த டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை பார்க்கும் பொழுது கதையை கணிக்க முடியவில்லை. எனினும் 'யாமிருக்க பயமே' படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த  படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். கிறிஸ்துமஸுக்கு ஒரு நல்ல டிரீட்டாக இந்த படம் அமையும் என்று டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'யாமிருக்க பயமே' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. வெளியானது 'காட்டேரி' படத்தின் டிரெய்லர்..! வீடியோ

Tags : Vaibav

vaibhav stares katteri thrilling trailer released வெளியானது 'காட்டேரி' படத்தின் டிரெய்லர்

People looking for online information on Vaibav will find this news story useful.