நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வருகிற 17ஆம் தேதி மிஸ்டர்.லோக்கல் படம் வெளியாகவுள்ளது. காமெடி படங்களுக்கு புகழ்பெற்ற ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நேற்று இன்று நாளை பட இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன்.
மேலும் சிவகார்த்திகேயன் தனது 16வது படமாக பாண்டியராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று இப்படத்தை தயாரிக்கவுள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் இணைந்துள்ளார் என்று தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.@immancomposer will be composing the music for #SK16BySunPictures@Siva_Kartikeyan @pandiraj_dir #SK16MusicByImman pic.twitter.com/4lmXmlO0ju
— Sun Pictures (@sunpictures) May 6, 2019