‘சீமராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் வரும் மே.17ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் SK14 சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருடன், ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சென்னை புறநகர் ரயிலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#Hero#ShootDiaries #TrainShoot
— PS Mithran (@Psmithran) May 1, 2019
First time shooting in an Electric Train@Siva_Kartikeyan @george_dop pic.twitter.com/3GrJsPGvaj