சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை - தலைமை தேர்தல் அதிகாரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பொதுமக்களுடன் பல்வேறு திரையுலக மற்றும் பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

The Government will take Action who is allowed Sivakarthikeyan to Vote said Satyabrata ahoo

மேலும் நடிகர் ரமேஷ் கண்ணா, தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு கூறினார்.  அதே போல நடிகர்கள் சிவகார்த்திகேயனுக்கும் ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை காரணம் காட்டி வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சிறிது நேரத்திலேயே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்களிப்பது உங்கள் உரிமை என்று மையிடப்பட்ட தனது ஆள்காட்டி விரலை காட்டிய படி உள்ள புகைப்படத்தை பகிர்ந்தார்.

இது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.