"தோனி ஆடுற டி20 மாதிரி” - தர லோக்கலாக களம் காணும் சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்துள்ள  ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியானது.

Sivakarthikeyan-Nayanthara starrer Mr.Local trailer has been released

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாச்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தில் யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் ‘மேனா மினிக்கி’ எனும் சிங்கிள் டிராக் பாடலும் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையில் கானா ரோகேஷ் எழுதிய இப்பாடலை பென்னி தயால் மற்றும் நிக்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஸ்டூடியோ க்ரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மே.17ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது.

"தோனி ஆடுற டி20 மாதிரி” - தர லோக்கலாக களம் காணும் சிவகார்த்திகேயனின் MR.லோக்கல் வீடியோ