www.garudabazaar.com

முகமே சுண்டி போச்சு! புது கோமாளிய கடுமையா திட்டிய Chef தாமு.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் ஆசம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை 02, பிப்ர்வரி 2022:- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். ஒரு சமையல் நிகழ்ச்சியை வித்தியாசமான பொழுதுபோக்கு மற்றும் காமெடி நிகழ்ச்சியால் அலங்கரிக்கும் இந்த நிகழ்ச்சி வெகுஜன மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

கோமாளிகளின் சேட்டைகள்..

இதில் சமையல் செய்பவர்கள் ஒருபக்கம், சீரியஸாய் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களுடன் இருக்கும் கோமாளிகள் அவர்களுடன் சேர்ந்து காமெடி பண்ணுவது, சொதப்புவது, அதே சமயத்தில் அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட வேலைகளை செய்வார்கள். சில சமயங்களில் சமையல் நன்றாக வந்துவிடும். சில சமயம் கோமாளிகள் சொதப்பல் நடந்து சமையல் மோசமாகிவிடவோ, நேர தாமதம் ஆகிவிடவோ கூடலாம். அதே சமயம், கோமாளிகள் போகிறபோக்கில் செய்யும் ஒரு விஷயத்தால் சமையல் திடீரென நன்றாக வந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read: இப்பதானே ப்ரோமோ வந்தது?.. 2 மாசத்துக்குள்ள சீரியலை Quit பண்ணும் பிரபல ஹீரோ.. அவரே சொன்ன காரணம்! ரசிகர்கள் ஷாக்!

குக்குகள்...

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

எனினும் கண்ட்ரோலை சமைக்கக்கூடிய போட்டியாளர்கள் தங்கள் கையில் வைத்திருப்பார்கள். அனைவருமே கிட்டத்தட்ட சமையலில் அசத்துவார்கள். காமெடிக்கு கியாரண்டி இருக்கக்கூடிய அதேவேளையில் சமையலுக்கான டேஸ்ட்டும் இருக்கும் .இப்படி போகும் இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருக்கும் அனைவரும் ரசிகர்களாக மாறிப் போயினர்.

நடுவர்கள்..

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளிட்டோர் சமைத்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து கருத்து சொல்வது உண்டு. முன்பெல்லாம் சீரியஸாக இருந்த இந்த நடுவர்கள் தற்போது கோமாளிகளுடன் இணைந்து அவர்களும் காமெடி செய்து நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துக் கொண்டு செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

கோமாளி அருண்

இந்த நிகழ்ச்சியில் புதிய கோமாளியாக அறியப்படுபவர் அருண். தனக்கே உரிய புதிய பாடி லாங்குவேஜ் மற்றும் திருட்டு முழி என பலவற்றால் கவனிக்க வைக்கும் அருண் இந்நிகழ்ச்சியில் சமைக்கக்கூடிய அம்மு அபிராமியுடன் இணைந்து கோமாளித்தனம் பண்ணுகிறார். 

குக்.. நடிகை அம்மு அபிராமி..

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இவருடன் தான் அருண் கோமாளியாக பங்கேற்று செம்மயாக அனைவரையும் கலகலப்பூட்டுகிறார். இந்நிலையில் இவருடன் அம்மு அபிராமி போராடி, தான் செய்த சமையலை கொண்டுவந்து நடுவர்கள் முன்னிலையில் வைத்துவிட்டு அமைதியாக நிற்கிறார். அருகில் அருண் நிற்கிறார்.

கலங்கிய புதிய கோமாளி அருண்..

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

அப்போது அந்த சமையலை பற்றியும், அதில் என்னென்ன போட்டிருக்கிறார்கள். எப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் எனது குறித்து அருணிடம் விளக்கம் கேட்ட செஃப் தாமோதரன்,  கொஞ்ச நேரம் அருணை கடுமையாக திட்டுவது போல் சீரியஸாக பேச, அருண் அப்போது கோமாளிக்குரிய இயல்புடன் பதில் கூறுகிறார். ஆனாலும் அவர் உள்ளுக்குள் கலங்கியது தெரிந்தது.

பிராங்க் பண்ணதும் நம்பிட்டாரு

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

வார்த்தைகளில் இருந்த காமெடி உடல்மொழியில் இல்லை. அதன் பிறகு அவரை அடிப்பது போல் அருகில் சென்ற செப் தாமோதரன் திடீரென அருணை கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது பரவசத்தில் திளைத்து மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.  அதாவது செஃப் தாமோதரன் தன்னிடம் பிராங்க் பண்ணினார் என்பது தெரியாமல் அருண் அதை நம்பி ஒரு கணம் கலங்கி விட்டார். பின்னர் விஷயம் தெரிந்து தாமோதரனை கட்டிக்கொண்டார்.

Also Read: போடு சக்க.. குக் வித் கோமாளி 3-ல் புகழ்!.. கெத்து எண்ட்ரி.. ஆனா வந்தவுடனே வாங்கிய உதை.. தெறி ப்ரோமோ

தொடர்புடைய இணைப்புகள்

Chef Dhamu Angry Prank to Comali Arun Cook With Comali 3

People looking for online information on BBUltimateTamil, BiggBossUltimateTamil, Cook with comali 3, Cook With Comali Season 3, CWC, Vijay Television will find this news story useful.