www.garudabazaar.com

இவர் இல்லாமலா? நெவர்!.. பலரும் மிஸ் பண்ணும் குக் வித் கோமாளி பிரபலம் திரும்பவும் வராரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Cook With Comali: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான நிகழ்ச்சி குறித்து கோமாளி.

will pugazh come again in cook with comali season 3 deets

குக் வித் கோமாளி 2

இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் வனிதா வெற்றி பெற்றிருக்கிறார். வனிதா விஜயகுமார் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

will pugazh come again in cook with comali season 3 deets

பிக்பாஸ் அல்டிமேட்

இது தொடர்பான அதிகாரபூர்வ ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேரமும் ஓடக்கூடிய பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில வனிதா பங்கேற்க இருக்கிறார்.

will pugazh come again in cook with comali season 3 deets

குக் வித் கோமாளி 3வது சீசன் போட்டியாளர்கள்

இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக மனோபாலா, ஷ்ருதிகா, வித்யூலேகா, ரோஷினி ஹரிபிரியன், கிரேஸ் கருணாஸ், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், ஆண்டனி தாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

will pugazh come again in cook with comali season 3 deets

3வது சீசன் கோமாளிகள்..

இதில் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, குரேஷி, சிவாங்கி, சூப்பர் சிங்கர் பரத், சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன், சக்தி, பாலா, ஷீத்தா கிளாரின் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இவர்களுடன் அனைவரும் மிஸ் பண்ணுவதாக ஃபீல்  பண்ணப்பட்ட ஒரே ஒரு ஆள் யார் என்றால் அது புகழ் தான்.

will pugazh come again in cook with comali season 3 deets

திரைப்படங்களில் புகழ்

நடிகர் புகழ் அண்மைக் காலங்களாக திரைப்படங்களிலும் பிஸியாக இருக்கிறார். நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளிவந்த சபாபதி திரைப்படத்தில் புகழ் சந்தானத்தின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருப்பார். இதேபோல் புகழின் நெருங்கிய நண்பரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவருமான நடிகர் அஸ்வினுடனான புதிய திரைப்படத்தில் புகழ் இடம் பெற்றிருந்தார்.

will pugazh come again in cook with comali season 3 deets

நடிகர் அஸ்வின்,  தேஜூ அஸ்வினி மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தில் புகழ் அஸ்வினின் நண்பராக தோன்றி நடித்திருப்பார். இவற்றைத் தவிர பல முன்னணி திரைப்படங்களிலும் நடித்து வரும் புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்பாரா? என்கிற கேள்வி, ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது.

will pugazh come again in cook with comali season 3 deets

3வது சீசனில் புகழ் பங்கேற்பாரா?

இந்த நிலையில் நடிகர் புகழ், இந்த நிகழ்ச்சிக்கு முழுமையாக வருகை தந்து, பங்கு பெற்று ரசிகர்களை என்டர்டெயின் பண்ணுவதற்கு முடியாவிட்டாலும் கூட, நேரம் கிடைக்கும்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக, தற்போது தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

will pugazh come again in cook with comali season 3 deets

குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் மற்றும் முதல் சீசன்களில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோருடன் சேர்ந்து புகழ் பண்ணிய அட்ராசிட்டிகளும் காமெடிகளும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மறக்கமுடியாத தருணங்களாக ரசிகர்களின் நினைவில் இருக்கின்றன. இந்த நிலையில் மீண்டும் புகழ் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றால் ரசிகர்கள் இன்னும் குஷி ஆகி விடுவார்கள்.

Also Read: ஆர்யா வெளியிட்ட பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில் லுக்! 90S Kidsக்கு பரீச்சயமான பேரா இருக்கே?

தொடர்புடைய இணைப்புகள்

will pugazh come again in cook with comali season 3 deets

People looking for online information on Cook with comali 3, Cook With Comali Season 3, CWC, CWC 3, Vijay Tv Pugazh will find this news story useful.