Breaking: ரஜினி, கமலுடன் இணையும் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - முக்கிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநகரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனது திறமையான இயக்கத்தால் விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒரு சேர திருப்திப்படுத்தி தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்தார்.

Breaking update on Superstar Rajinikanth, Kamal Haasan and Lokesh kanagaraj next | ரஜினிகாந்த் , கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் மு

அடுத்ததாக இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 'கைதி' படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் பாடல்கள், காமெடி என எதுவும் இல்லாமல் ஒரே இரவில் நடைபெறும் கதையை மிகவும் சுவாரஸியமான திரைக்கதையால் நம்மை சீட் நுனிக்கே வரவழைத்திருப்பார்.

தற்போது அவர் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்துக்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்துக்கான கதை விவாதத்தில் கடந்த வாரம் முதல் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறாராம்.

Entertainment sub editor