சினிமா ஹீரோ ஸ்டைலில் ஓடும் கார்களில் நின்று ஸ்டண்ட் செய்த போலீஸ் அதிகாரி… வைரலாகும் வீடியொ!
முகப்பு > சினிமா செய்திகள்சினிமாவையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்து சாகசங்களில் ஈடுபடுவது இப்போது குழந்தைகளைப் போல பெரியவர்களுக்கும் பிடித்த பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காவல் உதவி ஆய்வாளரான மனோஜ் யாதவ், ஓடிக்கொண்டிருந்த இரண்டுக் கார்களில் ஏறி நின்றபடி ஸ்டைலாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடித்திருந்த ஒரு படத்தில் கையாண்ட இதே பொன்ற ஸ்டண்ட் பல சினிமாக்களில் பிற்காலத்தில் காட்சியாக வைக்கப்பட்டன.
ஆனால், மனோஜுக்கு இந்த வீடியோ வினையாக முடிந்தது. காவல் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு சாலை விதியை மீறியதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்ற போதும் இந்த வீடியோ மொழி பேதங்களை தாண்டி இந்தியா முழுக்க வைரலாகி வருகிறது.
சினிமா ஹீரோ ஸ்டைலில் ஓடும் கார்களில் நின்று ஸ்டண்ட் செய்த போலீஸ் அதிகாரி… வைரலாகும் வீடியொ! வீடியோ