Video: இஞ்சி இடுப்பழகி... கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி மகளுடன் செம்ம குத்து
முகப்பு > சினிமா செய்திகள்லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அதன் காரணமாக மீம்ஸ், டிக்டாக் வீடியோ என முன்பை விட சமூக வலைதளங்களில் அதிகம் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

மேலும் பிரபலங்களும் வித்தியாசமான டாஸ்க்குகள் செய்து ஒருவரையொருவர் சேலஞ்ச் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது மனைவி குழந்தைகளுடன் டிக் டாக் மூலம் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவர் அல்லு அர்ஜூனின் 'அல வைக்குந்தபுரம்லோ' பட பாடலான 'புட்ட பொம்மா'விற்கு தனது மகளுடன் வித்தியாசமாக நடனமாடி வீடியோ வெளியிடிட்டிருந்தார். அந்த வீடியோ செம வைரலானது. இந்நிலையில் தற்போது கமலஹாசனின் இஞ்சி இடுப்பழகி பாடல் டியூனுக்கு தனது மனைவி, மகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஈஸ்பிஎன் ஸ்போர்ஸ்ட் சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருடன் ரோகித் ஷர்மா உரையாடுகிறார். அப்போது, டிக்டாக் தெறிக்கவிடுவதாக ரோகித் ஷர்மா பாராட்ட, அதற்கு பதிலளிக்கும் வார்னர், ''இந்திய ரசிகர்களுக்காக நிறைய வீடியோ பண்ண போறேன். புட்ட பொம்மா மாதிரி எல்லா இந்திய ரசிகர்களுக்காகவும் பண்ணவிருக்கிறேன். சில பாலிவுட் , டோலிவுட் டான்ஸ் கற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது'' என்றார்.