www.garudabazaar.com

“அன்புதான் எல்லாம்.. அதுல 2 பேருமே ஒன்னுதான்பா!”😍 ரசிகர்கள் இதயம் வென்ற விஜய் & அஜித்.. Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் அஜித்

both Vijay Ajithkumar won fans heart trending pics

& விஜய்.

தளபதி என்று திரை ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையேக் கொண்டுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

விஜய், கடைசியாக   நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் திரையில் காணப்பட்டார்.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

both Vijay Ajithkumar won fans heart trending pics

இந்நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை கையில் தூக்கி வைத்திருக்கும் விஜய்யின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் துணிவு படத்தின் படப்பிடிப்பில் மாற்றுத் திறனாளி ரசிகருடன் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படம் வைரலானது. அந்த ரசிகர் நடிகர் அஜித்தை சந்தித்த தருணத்தை வீடியோ பதிவாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது அஜித் - விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதுடன் முன்னணி நடிகர்கள் ரசிகர்களுடன் இப்படி இயல்பாகவும் எளிமையாகவும் இருப்பது குறித்து அவர்களின் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.‌ அத்துடன், எப்போதும் ஒருவரை ஒருவர் "நண்பர்" என்று அழைத்துக் கொள்ளும் அஜித், விஜய் இருவருமே ரசிகர்களின் மீது அன்பு செலுத்துவதில் ஒரே மாதிரி இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டு அஜித் & விஜய் ரசிகர்கள் நெகழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

both Vijay Ajithkumar won fans heart trending pics

People looking for online information on Ajith Kumar, Thunivu, Varisu, Vijay will find this news story useful.