www.garudabazaar.com

"தாயை பார்த்தேன்!".. AV33 Shoot இடைவேளையில் அருண் விஜய் செய்த காரியம்! நெகிழ்ச்சி ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

AV33 Arun vijay heartmelt ரோட்டு கடையில் உணவருந்திய அருண் விஜய்

ஹரி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற  பகுதிகளை தொடர்ந்து இப்பொழுது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

AV33 Arun vijay heartmelt ரோட்டு கடையில் உணவருந்திய அருண் விஜய்

நேற்று முன்தினம் தணுஷ்கோடியில் பரபரப்பான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அனல் அரசின் ஸ்டண்ட் அமைப்பில் அருண்விஜய் நடித்த ஸ்டண்ட் காட்சியை அந்த ஊர் மக்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் திடீரென அருண்விஜய் நுழைந்ததும் கடையில் இருந்தவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.

அருண் விஜயோ, “நான் இங்கே சாப்பிடுகிறேன்.. என்ன இருக்கிறது?” என்று கேட்க... மிகவும் சந்தோஷமான அவர்கள், சூடாக மீன் குழம்பு, மீன் வறுவல் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு இலை போட்டு உணவு பறிமாரப்பட்டது. அவருடன் இன்னும் சிலரும் அமர்ந்து சாப்பிட்டனர். சுட சுட மீன் அருமையான சுவையுடன் இருந்ததினால், தனது டயட்டையும் மீறி நன்றாக சாப்பிட்டார். அந்த கடை நடத்தும் அம்மாவும் அவரை நன்றாக அம்மாவை போல் கவனித்து பறிமார.. அது அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

AV33 Arun vijay heartmelt ரோட்டு கடையில் உணவருந்திய அருண் விஜய்

சாப்பிட்டு விட்டு போகும் போது.. அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு.. அவருடன் புகை படம் ஒன்றை எடுத்துக் கொண்டார் அந்த கடைகார அம்மா. அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!!

இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மை  இயக்கிக் கொண்டிருக்கிறது.. அன்பை பகிர்வோம்"   என்று பதிவிட்டுள்ளார். அந்த பெண்மணியின் கவனிப்பு, தன் தாயை போல இருந்தது என்று அருண் விஜய் கூறியுள்ள வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், ராதிகா,  யோகி பாபு, கருடா ராம், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ராம், அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை ஹரி இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Source: Johnson, PRO.

Also Read: அதிர்ச்சியில் திரையுலகம்!! காஞ்சனா-3 பட நடிகை!.. கோவாவில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சோகம்!

தொடர்புடைய இணைப்புகள்

AV33 Arun vijay heartmelt ரோட்டு கடையில் உணவருந்திய அருண் விஜய்

People looking for online information on Arun Vijay, AV33, GV Prakash Kumar, Hari will find this news story useful.