www.garudabazaar.com

இரவு பகலாக ஸ்டண்ட் காட்சி Shoot.. அருண் விஜய்க்கு காயம்.. ஆனாலும் தளராத மன உறுதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து  வருகிறார்.

AV33 arun vijay injured in shoot but acts in stunt scene

அருண்விஜய், பிரியா பவானி சங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். 

Drumsticks புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு GV பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். காரைக்குடியில் இரவு பகலாக இந்த ஷூட்டிங்கில் நடித்து வருகிறார், அருண்விஜய். அனல் அரசு இந்த படத்துக்கான ஸ்டண்ட் காட்சியை அமைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது எதிர்பாராமல் திடீரென்று வலது தோள்பட்டையில் அடிவிழுந்தது. லேசான காயத்துடன் தப்பினார். தொடர்ந்து பகலில் நடைபெறும் காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனாலும் வலி தாங்க முடியாமல் சிகிச்சை பெற்றி வருகிறார். மீண்டும் நாளை மறுநாள் நடைபெறும் பரபரப்பான ஸ்டண்ட் காட்சிகளிலும் கலந்து கொண்டு அருண் விஜய் நடிக்கிறார்.

Source: Johnson,PRO

Also Read: “சாப்பாடே கொடுக்கல.. கைய ஒடைச்சுட்டாங்க”.. கேரளாவில் கைது! தமிழகம் வந்த மீரா..  பரபரப்பு Video!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AV33 arun vijay injured in shoot but acts in stunt scene

People looking for online information on Arun Vijay, AV33, GV Prakash Kumar, Priya Bhavani Shankar, Yogi Babu will find this news story useful.